Paristamil Navigation Paristamil advert login

ராகி கூழ்

ராகி கூழ்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9755


அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக ராகி அல்லது கம்பு கொண்டு செய்யப்படும் கூழ் தான் சாப்பிட்டு வந்தார்கள். அதனால் தான் நம் பாட்டி, தாத்தா போன்றோர் இன்னும் வலுவுடன் நோய்களின்றி இருக்கின்றனர். ஆகவே நீங்களும் நன்கு வலுவுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒரு முறை ராகி அல்லது கம்பு கொண்டு கூழ் செய்து சாப்பிடுங்கள். இங்கு ராகி கூழ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
 

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 கப்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பானை/பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டி சேராதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை அடுப்பில் வைத்து, கரண்டியால் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி கிளறும் போது, கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை இறக்கி விடவும். பின்பு அதில் தயிர் மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, நன்கு கரைக்க வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், மோர் மிளகாயை போட்டு பொன்னிறமாக பொரித்து, கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி, 5 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கூழ் ரெடி!!!

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்