Paristamil Navigation Paristamil advert login

பாப்பரசர் வருகை - வீதி முடக்க போராட்டம்

பாப்பரசர் வருகை - வீதி முடக்க போராட்டம்

19 புரட்டாசி 2023 செவ்வாய் 19:20 | பார்வைகள் : 11493


இவ்வார சனிகிழமை பாப்பரசர் பிரான்சுக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையின் போது வீதி முடக்க போராட்டம் ஒன்றுக்கு வாடகை மகிழுந்து சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Marseille நகருக்கு சனிக்கிழமை பாப்பரசர் வருகை தர உள்ளார். அன்றைய நாளில் Bouches-du-Rhône பிராந்திய வாடகை மகிழுந்து சாரதிகள் அனைவரும் போராட்டத்துக்கு அழைக்கபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,800 மகிழுந்துகள் நகரத்தினை முற்றுகையிட உள்ளன. 

Marignane விமான நிலையம், Saint-Charles தொடருந்து நிலையம் போன்றவற்றை முடக்கி காலை 6 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

ஆனால் இந்த ஆர்ப்பாட்டமும் வீதி முடக்கமும் பாப்பரசரின் பிரான்ஸ் வருகையை எதிர்த்து இல்லை. மாறாக மார்செயில் உள்ள வாடகை மகிழுந்து கட்டணங்களைக் குறைக்க அரசு தீர்மானித்துள்ளது. இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்