"நாங்கள் எரிபொருட்ளை நஷ்டத்தில் விற்கமாட்டோம்" TotalEnergies.

20 புரட்டாசி 2023 புதன் 06:57 | பார்வைகள் : 14268
பிரான்சில் என்றும் இல்லாத அளவுக்கு எரிபொருட்களின் விலையேற்றம் காணப்படுகிறது. இதனை சமாளிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு முயற்சியாக எரிபொருள் விற்பனை நிறுவனங்கள், லாபம் இல்லாமல் கொள்வனவு விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்றும், முடிந்தால் எரிபொருளை நஷ்டத்தில் விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும். பிரான்ஸ் பிரதமர் Élisabeth Borne விடுத்த வேண்டுகோளை, நிதி அமைச்சர் Bruno Le Maire மீண்டும் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளுக்கு விடையளித்த, பிரான்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலையங்களைக் கொண்ட TotalEnergies நிறுவனங்களின் இயக்குநர் Patrick Pouyanné.
"TotalEnergies ஒருபோதும் அரசாங்கம் விடுத்துள்ள, நஷ்டத்தில் விற்பனை எனும் வேண்டுகோளை ஏற்காது, நாங்கள் ஏற்கனவே 3 000 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விலை 1.99 euros அதிகமாகாமல் விற்பனை செய்கிறோம், இதுவே TotalEnergies நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம். இதைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025