குவைத் நாட்டில் அரச ஊழியர்களுக்கு புதிய சலுகை
20 புரட்டாசி 2023 புதன் 08:36 | பார்வைகள் : 8442
குவைத் நாட்டில் அரச ஊழியர்களுக்கு புதிய சலுகை வழங்கப்படவுள்ளது.
அதாவது பணபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசங்கம் சலுகை வழங்கியுள்ளது.
அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை ஆரம்பிக்க முடியும்.
அத்துடன் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்ப முடியும்.
கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழியர்கள் தாம் விரும்பும் நேரத்தில் தமது வேலையை ஆரம்பிப்பதால் உற்சாகத்துடன் பணிபுரிகின்றனர் என குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குவைத் அரச ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan