நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு காத்திருக்கும் பேராபத்து... ஆய்வு தகவல்
.jpg)
17 புரட்டாசி 2023 ஞாயிறு 11:07 | பார்வைகள் : 6837
இத்தாலியின் மிலனில் உள்ள ஐரோப்பிய சுவாச அமைப்பில்(European Respiratory Society) புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான இளம் வயதினர்கூட இன்று பல்வேறு உடல் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கர்ப்ப காலம் முதல் மூன்று வயது வரையுள்ள 663 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மூன்று வயதிற்கு முன்னதாகவே, நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு இருமல், சளி என சராசரியாக 17 சுவாச நோய்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுவே கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சராசரியாக 15 சுவாசத் தொற்றுகள் இருந்துள்ளன.
இதில் கிராம, நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைச் சூழல் பொறுத்து குழந்தைகளின் உடல்நிலையில் பெருமளவில் மாற்றம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பீடியாட்ரிக் பல்மனாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஆய்வில், 3 வயதுக்குள்ளாகவே குழந்தை பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் குழந்தைகள், ஈரப்பதமுள்ள வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு மார்பில் பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.