எரிபொருள் விலை வீழுமா? பிரதமர் திட்டத்திற்கு ஒலிவியே வெரோன் பொழிப்புரை!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 16:05 | பார்வைகள் : 3635
எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிறுவனங்களிடம் நட்டத்தில் அல்லது மிகவும் குறைந்த இலாபத்துடன் வாகன எரிபொருளை விற்குமாறு பிரதமர் எலிசபெத் போர்ன் நேற்றுக் கோரிகை விடுத்திருந்தார்.
இதற்கு தற்போதைய அரசாங்கப் பேச்சாளரான ஒலிவியே வெரோன் விளக்க உரை வழங்கி உள்ளார்.
«இது ஒன்றும் ஆறு மாதத்திற்கு ஒரு லிட்டர் எரிபொருள் 1€40 இற்கு வந்து விடும் என்பதல்ல. தங்களால் முடிந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் அல்லது பல நாட்களிற்கு பிரதமரின இந்தத் திட்டத்தில் எரிபொருளை விற்க முடியும்»
«வாகனம் உபகோகிப்பவர்கள் இதனை உபயோகித்து எரபொருள் தாங்கியயை நிரப்ப முடியும். சில நாட்களோ அல்லது சில வாரங்களோ நிம்மதியாக வாகனங்களை உபயோகிக்க முடியும்»
«தற்போது லிட்டரிற்கு 1€99 இற்கு எரிபொருள் விலையானது உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 40 முதல் 50 சதங்கள் சில நாட்களிற்குக் குறைக்க முடியும்»
«பிரான்சில் நட்டத்தில் எரிபொருள் விற்பனை செய்வது குற்றச் செயல். ஆனால் பிரதமரின் இந்தத் திட்டம் விதிவிலக்கானது»
«இந்தக் விலைகுறைப்புக் கால அட்டவணைகளை எரிபொருள் தயாரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பு நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசாங்கம் சட்டத்தின் மூலம் இந்தக கால அட்டவணையை நிர்ணயிக்கும்»
என அரசாங்கத்தின் பேச வல்லவரான ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.