Paristamil Navigation Paristamil advert login

எந்தவொரு அகதியையும் பிரான்சிற்குள் விடமாட்டேன்!! - எரிக் செமூர்!!

எந்தவொரு அகதியையும் பிரான்சிற்குள் விடமாட்டேன்!! - எரிக் செமூர்!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 12544


இத்தாலியின் லம்பெதுசாவில் வந்திறங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொறுப்பேற்கவேண்டும் என்றும் இத்தாலியின் சுமையைக் குறைக்கவேண்டும் என்றும் ஐரொப்பிய ஆயைத்தின் தலைவர் உர்சுலா (  Ursula von der Leyen) தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்று செவ்வியளித்த ஜனாதிபதி வேட்பாளரும் தேசியவாதியுமான எரிக் செமூர்

«நான் ஜனாதிபதியானால் ஒரு அகதியையும் இத்தாலியில் இருந்து பிரான்சிற்குள் நுழைய விடமாட்டேன். நாட்டிற்குள் அவர்களை ஊடுருவ விடமாட்டேன்» 

எனத் தெரிவித்துள்ளார்.

தீவிர வலதுசாரியான எரிக் செமூர் ஜனாதிபதி வேட்பாளராக் நின்ற சமயம் தனது தேர்தற் பிரச்சாரத்திலும் அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் எமானுவல் மக்ரோனும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் உச்ச விலையேற்றம், கொரோனாத் தொற்று போன்றவற்றை திசை திருப்ப, உக்ரைன் போர், நைஜேர் பிணக்கு;, தற்பொழுது லம்பதூசா என மாறி மாறி கவனத்தை; மாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்