Paristamil Navigation Paristamil advert login

26 விரல்களுடன் பிறந்த  பெண் குழந்தை...!

26 விரல்களுடன் பிறந்த  பெண் குழந்தை...!

18 புரட்டாசி 2023 திங்கள் 07:20 | பார்வைகள் : 4184


இந்தியாவில் 26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் பட்டாச்சாரியா. இவர் மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக உள்ளார்.

இவரது மனைவி சர்ஜூ தேவி (வயது 25). இவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் ஒவ்வொரு கையிலும் 7 விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் 6 விரல்கள் என மொத்தம் 26 விரல்கள் இருந்தது.

 இதனால் அந்த குழந்தை தேவியின் அவதாரமாக கருதி அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது அரிதானது.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் சோனி கூறுகையில்,

குழந்தைக்கு 26 விரல்கள் இருப்பது எந்தவித பாதிப்பும் இல்லை. 

ஆனால் இது ஒரு மரபணு கோளாறு ஆகும். அதே நேரம் குழந்தையின் தாயாரும் நல் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றார்.

குழந்தையின் தாயாரான சர்ஜூ தேவியின் சகோதரர் கூறுகையில்,

என் சகோதரிக்கு 26 விரல்கள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. அதை தோளகர் தேவியின் அவதாரமாக கருதுகிறோம். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்