பரிஸ் : வழக்கறிஞரை கடத்தி பணம் கேட்டு தாக்குதல்! - வழக்கில் தோற்றதால் ஆத்திரம்!!
18 புரட்டாசி 2023 திங்கள் 07:52 | பார்வைகள் : 16520
வழக்கறிஞர் ஒருவரைக் கடத்தி அவரிடம் இருந்து பணம் கோரிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 51 வயதுடைய வழக்கறிஞர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 43 மற்றும் 51 வயதுடைய ஒருவர் குறித்த வழக்கறிஞரை கடத்தி அவரைத் தாக்கி, அவரிடம் இருந்து 700 யூரோக்கள் பணத்தினை கோரியுள்ளனர்.
குறித்த இருவரும் வழக்கறிஞரிடம் பணம் செலுத்தி, நீதிமன்றத்தில் தங்கள் சார்பாக வாதாடுவதற்கு கோரியிருந்த நிலையில், அவர் சரியாக வாதிடாமல், வழக்கில் தோற்றதாக குற்றம்சாட்டி அவரைக் கடத்தியுள்ளனர்.
வழக்கறிஞர் ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் கடத்தல்காரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

























Bons Plans
Annuaire
Scan