Franceசில் முதல் தடவையாக TikTok சமூகவலைத்தளத்தின் மீது பெற்றார்கள் வழக்கு தொடுப்பு.

18 புரட்டாசி 2023 திங்கள் 11:07 | பார்வைகள் : 13762
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 2021 Bouches-du-Rhône பகுதியில் Marie என்னும் 15 வயது சிறுமி பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலைக்கு முன்னர் Marie, சமூகவலைத்தளமான TikTok ல் "தன் உடல் பருமனை காரணம் காட்டி பல மாணவர்கள் தன்னை அவமானப்படுத்தி துன்புறுத்துவதாகவும், இதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும், அதற்காக எப்படி தற்கொலை செய்வது என தேடிவருகின்ற" பல ஒளிப்பதிவுப் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
இதனை அண்மையில் அறிந்து கொண்ட Marieன் பெற்றோர்கள் "தற்கொலைக்கு தூண்டுதல்", "ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவத் தவறியமை" மற்றும் "தன்னைத்தானே கொல்வதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல்" போன்ற குற்றங்களின் கீழ் சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் TikTok செயலி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Toulon அரசு வழக்கறிஞர் அலுவலகம், "பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் , Marieயின் பெற்றோர் TikTokக்கு எதிராக செய்துள்ள புகார் ஒரு ஆழமான பகுப்பாய்வுக்கு தகுதியானது" எனத் தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1