Paristamil Navigation Paristamil advert login

கிரிக்கெட் அணி ஜெர்சியில் இந்தியா நீக்கம் - ரசிகர்கள் கண்டனம்

கிரிக்கெட் அணி ஜெர்சியில் இந்தியா நீக்கம் -   ரசிகர்கள் கண்டனம்

12 ஆடி 2023 புதன் 04:59 | பார்வைகள் : 5102


இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இந்தியாவை நீக்கியதால் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி புதிதாக மாற்றம் செய்யப்பட்டது. புதிய ஜெர்சிக்கு உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

அடிடாஸ் வெளியிட்ட ஜெர்சியைப் பார்த்த நெட்டிசன்கள்.. பரவாயில்லை... ஜெர்சியின் நடுவில் இந்தியா இருக்கிறது. பார்ப்பதற்கு அழகாகவும், ஜெர்சியின் தரம் வாய்ந்ததாகவும் இருக்கிறது,

மேலும் அடிடாஸ் நிறுவனம் தங்களுடைய லோகோவை மட்டும் வைத்துள்ளது தனி சிறப்பாக உள்ளது என்று பாராட்டினர். ஆனால், சொல்லி கொஞ்ச நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எப்போதுமே இந்திய அணி வீரர்கள் ஜெர்சி அணியும்போது, நெஞ்சில் இந்தியா என்று எழுதியிருக்கும். ஆனால், இந்தியாவை நீக்கிவிட்டு ட்ரீம் 11 என்றும், சிவப்பு நிறத்தில் உள்ளது.

தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர்.

ஜெர்சியில் இந்தியா என்ற வார்த்தை எங்கே? ஏன் அந்த வார்த்தையை நீக்குனீர்கள்? ஓஹோ... ஜெர்சியில் அந்த நிறுவனத்தின் பெயர் வைத்தால் பிசிசிஐக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்தானே. அதனால்தான் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பார்கள் என்று பிசிசிஐ கேள்வி கேட்டும், கண்டனத்தை தெரிவித்தும் நெட்டிகன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்