Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு செல்ல முயற்சித்து ஏமாற்றப்படும் இலங்கையர்கள்!

வெளிநாடு செல்ல முயற்சித்து ஏமாற்றப்படும் இலங்கையர்கள்!

21 புரட்டாசி 2023 வியாழன் 15:06 | பார்வைகள் : 8886


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 1337 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் கூறியுள்ளது.

இந்த வருடத்தில் பதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில், 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்