மெற்றோ நிலையத்தில் வைத்து €120,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு!

21 புரட்டாசி 2023 வியாழன் 15:09 | பார்வைகள் : 12249
மெற்றோ நிலையத்தில் வைத்து பயணி ஒருவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள La Motte-Picquet-Grenelle மெற்றோ நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணி அளவில் தொடருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரை திடீரென சுற்றிவளைத்த குழு ஒன்று, அவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை கொள்ளையிட்டுச் சென்றனர்.
மிக விரைவாக கொள்ளையர்கள் மெற்றோ நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 120,000 யூரோக்கள் மதிப்புள்ள Jaeger-LeCoultre நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்றே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1