Paristamil Navigation Paristamil advert login

மீன் 65

மீன் 65

21 புரட்டாசி 2023 வியாழன் 15:05 | பார்வைகள் : 2774


மீன் 65 பெரும்பாலும் மீன் கடைகளில் அதிகமாக கிடைக்கும். மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் 65 சாப்பிட்டு இருப்பார்கள். மீன் 65 சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். அதனை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: 

மீன் – 1 கிலோ, 
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன், 
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன், 
கார்ன் மாவு – 1/2 கப், 
மைதா மாவு – 1/2 கப், 
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், 
முட்டை – 2, 
உப்பு – தேவையான அளவு, 
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஒரு பவுலில் மீனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கார்ன்மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, முட்டை உடைத்து அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். கூடவே அதனுடன் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வெண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் ஊறவைத்த மீனை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் 65 தயார். இதை செய்ய 45 நிமிடம் ஆகும், 4 நபர்கள் வரை சாப்பிடலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்