490 ஆண்டுகளில் பின்னர் Marseille நகருக்கு வருகை தரும் பாப்பரசர்
22 புரட்டாசி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 6619
இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி பாப்பரசர் Marseille நகரக்கு வருகை தர உள்ளார். அரச பயணமாக இல்லாமல் தனிப்பட மதம் சார்ந்த பயணமாக இது அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 490 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசுத்த பாப்பரசர் ஒருவர் Marseille நகருக்கு வருகை தர உள்ளார். முன்னதாக 1553 ஆம் ஆண்டு பாப்பரசர் Clement VII, தனது மருமகள் ஒருவரது திருமணத்துக்காக Marseille நகருக்கு வருகை தந்திருந்தார். அதன்பின்னர் அங்கு பாப்பரசர் ஒருவர் இந்த நகருக்கு வருவது, 490 ஆண்டுகளின் பின்னர் இதுவே முதல்முறையாகும்.
பின்நாட்களில் பாப்பரசர்களாக மாறிய Pius IX, Leo XIII மற்றும் Pius XI போன்றவர்கள், இளம் வயதில் திருத்தந்தையாக இருந்தபோது மார்செய் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.