இலங்கையில் பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்தில்?
22 புரட்டாசி 2023 வெள்ளி 07:30 | பார்வைகள் : 11531
இலங்கையில் செயற்கை முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது எனவும் மக்கள் அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருவதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan