சாள்ஸ் மன்னரின் வருகைக்கு முன்னர் - பூக்கள் விற்பனையாளர்களை அவசரமாகச் சந்தித்த பரிஸ் நகர முதல்வர்!

22 புரட்டாசி 2023 வெள்ளி 08:01 | பார்வைகள் : 11155
Île de la cité பகுதியில் பூக்கள் விற்பனையில் ஈடுபடும் கடைக்காரர்களை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ சந்தித்தார். மன்னர் சாள்ஸ் அங்கு பயணம் செய்ய இருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஆன் இதால்கோ அவரசமாக அவர்களை சந்தித்திருந்தார்.
பிரான்சுக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள சாள்ஸ் மன்னர் மற்றும் அரசியார் கமீலா ஆகியோர் நேற்று இரண்டாவது நாளாக பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பயணித்திருந்தனர். அதில் Île de la cité பகுதியில் உள்ள பூக்கள் விற்பனை செய்யும் சந்தை தொகுதியும் ஒன்றாகும். ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னர், ஒருமணிநேரத்துக்கு முன்பாக பூக்கள் விற்பனையாளர்களை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ சந்தித்தார்.
நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் குறித்த பூக்கள் விற்பனை செய்யும் சந்தைப்பகுதி, நில ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படப்போவதாகவும் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நேற்றைய தினம் ஆன் இதால்கோ முற்றுப்புள்ளி வைத்தார். அவர்களது சந்தை அங்கே அமைந்திருக்கும் எனவும், அவர்கள் அங்கிருந்து செல்லத்தேவையில்லை என்பதையும் ஆன் இதால்கோ விற்பனையாளர்களிடம் உறுதியளித்தார்.
இந்த அவசர சந்திப்பும், அறிவிப்பும் சாள்ஸ் மன்னரின் வருகை ஒட்டியே இடம்பெற்றதாக விமர்சிக்கப்படவும் தவறவில்லை.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1