விமான நிலையம் ஊடாக - குரங்கின் மண்டை ஓடுகள் கடத்தல்!
22 புரட்டாசி 2023 வெள்ளி 09:04 | பார்வைகள் : 5926
Charles-de-Gaulle விமான நிலையத்தின் ஊடாக குரங்கின் மண்டை ஓடுகள் கடத்தப்பட்ட நிலையில், சுங்கவரித்துறையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருட்கள், தங்கக்கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத பொருட்களை கைப்பற்றும் சுங்கவரித்துறையினருக்கு இச்சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பெட்டி ஒன்றில் மொத்தமாக 392 குரங்கின் மண்டை ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நைஜீரியா மற்றும் காபோன் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள Cameroon எனும் நாட்டில் இருந்து இந்த பெட்டி அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் ஒன்றாக சீராக அடுக்கப்பட்டு மொத்தமாக 392 குரங்குத்தலை மண்டை ஓடுகள் அதில் இருந்துள்ளன.
கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பெட்டிகளில் இருந்து பல விலங்குகளின் மண்டை ஓடுகளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் 400 விலங்குகளின் மண்டை ஓடுகள் இதுபோல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட மண்டை ஓடுகள் நேற்று வியாழக்கிழமை Aix-en-Provence நகரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் கையளிக்கப்பட்டது. G