Paristamil Navigation Paristamil advert login

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி

22 புரட்டாசி 2023 வெள்ளி 09:23 | பார்வைகள் : 2876


இந்தியா அவுஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற தொடங்கியுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

போட்டி தொடங்கி 7.1 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 27 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்திய அணி
ஷுப்மன் கில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்),  ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி 

அவுஸ்திரேலியா அணி
டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே,  சீன் அபோட், ஆடம் ஜாம்பா மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், 


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்