அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!
22 புரட்டாசி 2023 வெள்ளி 11:01 | பார்வைகள் : 4237
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 318 ரூபா 51 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 90 சதமாக காணப்பட்டது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 90 சதமாக காணப்பட்டது.