Paristamil Navigation Paristamil advert login

மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படும் மரணம் - சுவிட்சர்லாந்து தகவல்

மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படும் மரணம் - சுவிட்சர்லாந்து தகவல்

22 புரட்டாசி 2023 வெள்ளி 11:24 | பார்வைகள் : 3947


சுவிட்சர்லாந்தில் மருந்துகள் பாவணையால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 2012ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், ஒவ்வொரு ஆண்டும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பக்க விளைவுகள் காரணமாக 32,000 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Lucerne மற்றும் Zurich பல்கலைக்கழகங்கள், Zurich பல்கலை மருத்துவமனை மற்றும் Swissmedic என்னும் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அதிக அளவில், செரிமான மண்டலம் (இரைப்பை, குடல் அழற்சி), சிறுநீரக மண்டலம் (கடுமையான சிறுநீரக செயலிழப்பு) அல்லது மன /நடத்தை நிலை (ஓபியாய்டு சார்பு போன்றவை) போன்ற பக்க விளைவுகளே கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஆண்டொன்றிற்கு 2.2% பேர் அல்லது சுமார் 700 பேர் மருத்துவமனையிலேயே  இறந்துள்ளார்கள்  ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்