மின்னஞ்சல் அனுப்பிய 20 வயது மாணவன் (Hautes-Pyrénées) Tarbes நகரில் கைது.
22 புரட்டாசி 2023 வெள்ளி 13:13 | பார்வைகள் : 7630
கடந்த 19/09 அன்று Seine-Maritime, Tarbes மற்றும் Saint-Denis பகுதிகளில் உள்ள நடுநிலை கல்லூரி, மேல்நிலைக் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டதும், இதனால் குறித்த கல்லூரிகளின் இருந்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதும் Paristamil.com வெளியிட்ட செய்தியே.
இது ஒரு போலியான, விசமிகளால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்தான் என தெரியவந்த பின்னரும் காவல்துறையினர் குறித்த மிரட்டல் மின்னஞ்சல் குறித்து விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் Tarbes (Hautes-Pyrénées) பகுதியில் உள்ள lycée Marie Curie கல்லூரியில் 1400 மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டது, அந்த கல்லூரியிலேயே கணினி அறிவியல் துறையில் (BTS) பயிலும் மாணவன்அஎதான் என தங்களின் புலனாய்வு விசாரணையில் அறிந்து கொண்டனர்.
இதனையடுத்து குறித்த 20 வயது மாணவன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளான் என அரசு வழக்கறிஞர் Bérangère Prud'homme தெரிவித்துள்ளார். மாணவன் அன்றையதினம் கல்லூரிக்கு போகாமல், கல்லூரியின் தலைமை ஆசிரியருக்கு போலியான மின்னஞ்சலை அனுப்பியுள்ளான் என்பது தமக்கு சந்தேகம் இன்றி தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.