Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி

மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி

22 புரட்டாசி 2023 வெள்ளி 16:33 | பார்வைகள் : 5569


நடிகர் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்கினார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 45 கோடி வரை வசூல் செய்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கார்த்தி, பா ரஞ்சித் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து ஒரு படத்தை உருவாக இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி தற்போது ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர்’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’கைதி 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் பா ரஞ்சித் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்