Paristamil Navigation Paristamil advert login

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் - மார்செய் நகரை வந்தடைந்தார் பாப்பரசர்!!

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் - மார்செய் நகரை வந்தடைந்தார் பாப்பரசர்!!

22 புரட்டாசி 2023 வெள்ளி 17:03 | பார்வைகள் : 3727


இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பரிசுத்த பாப்பரசர் சற்று முன்னர் பிரான்சின் மார்செய் நகரை வந்தடைந்தார். 

மாலை 4 மணி அளவில் பாப்பரசர் தனது குழுவினருடன் வத்திக்கான் மற்றும் பிரெஞ்சு கொடிகள் பொறிக்கப்பட்ட Airbus A380 தனி விமானத்தில் Marseille Marignane விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை பிரதமர் Élisabeth Borne வரவேற்றார். இருவரும் கைகளை குலுக்கிக்கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

பின்னர் அங்கிருந்து வெள்ளை நிற Fiat 500 மகிழுந்தில் Notre-Dame de la Garde தேவாலயத்துக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைந்தார். அங்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin அவரை வரவேற்றதுடன், பல கிறித்தவ மதத்தலைவர்கள், திருத்தந்தைகள் அவரை வரவேற்றனர்.

பரிசுத்த பாப்பரசரின் வருகை அறிவிக்கும் விதமாக Notre-Dame de la Garde  தேவாலயத்தில் உள்ள மணி ஒலிக்கவிடப்பட்டது. 

மார்செய் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் பொறுப்பாளரான பாதிரியார் Jean-Marie Aveline, பாப்பரசரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பாப்பரசர் ஒருவர் மார்செய் நகருக்கு வருகை தருவது 490 ஆண்டுகளின் பின்னர் இடம்பெறும் நிகழ்வாகும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்