Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய அரசருக்கு PSG 3ம் இலக்க ஆடை!!

பிரித்தானிய அரசருக்கு PSG 3ம் இலக்க ஆடை!!

22 புரட்டாசி 2023 வெள்ளி 17:16 | பார்வைகள் : 5532


பிரான்சிற்கு வந்த பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் கை நிறையப் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்கின்றார்.

அதில் முக்கியமாக இவரின் பெயர் பொறித்த 3ம் இலக்க (முன்றாம் சார்ள்ஸ் என்பதைக் குறிக்க) PSG ஆடையாகும். இதனை நேற்று, PSG கழகத்தின் உரிமையார் Nasser Al-Khelaïfi வழங்கியிருந்தார்.

நேற்று சென்தெனி நகரத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களிற்கு PSG விளையாட்டுப் பயிற்சியளித்தது.

«PSG அறக்கட்டளையின் தொடர்ச்சியான பணிகளை முன்னிலைப்படுத்த மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா ஆகியோரை சந்திப்பது ஒரு பெரிய பெருமை மற்றும் பாக்கியம். பாரிஸ் சென்-ஜேர்மன், உள்ளளுர் சமூகங்களுக்கு நேர்மறையாக பங்களிப்பதிலும், குறிப்பாக பாரிஸ் பிராந்தியத்தில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதிலும் பெருமிதம் கொள்கிறது. நமது திட்டங்களையும் முன்முயற்சிகளையும் இன்று அவர்களின் மாண்புமிகு மன்னர்  மக்களுக்கு வழங்குவது பெருமையாக உள்ளது»

எனத் தெரிவித்த  நாசர் அல்-செலெய்பி ( Nasser Al-Khelaïfi) தன் கைகளாலேயே PSG ஆடையயை பிரித்தானிய மன்னரிற்கு வழங்கினார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்