உயிரிழந்த அகதிகளுக்கு பாப்பரசர் அஞ்சலி!
22 புரட்டாசி 2023 வெள்ளி 17:39 | பார்வைகள் : 20453
தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட அகதிகள் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு பாப்பரசர் அஞ்சலி செலுத்தினார்.
மார்செய் நகருக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர், இன்று தனது செய்தியில் இதனைல் குறிப்பிட்டார். 'அகதிகள் வாழ்வு உடைந்துள்ளது. கனவுகள் சிதைந்துள்ளனர். அவர்களது உயிர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கக்கூடாது' என பாப்பரசர் குறிப்பிட்டார்.
அகதிகளின் உயிரிழப்பை ஒரு செய்தியாகவோ, உயிழந்தவர்களை எண்ணிக்கையாகவோ பார்க்கக்கூடாது எனவும் பாப்பரசர் தெரிவித்தார்.
அண்மையில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்ட பாப்பரசர், இதுவே இறுதியான பெயர்ப்பட்டியலாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

























Bons Plans
Annuaire
Scan