சுமார் 46 நடுநிலை கல்லூரிகள், மேல்நிலைக் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். கல்வி அமைச்சு.
22 புரட்டாசி 2023 வெள்ளி 19:40 | பார்வைகள் : 7574
2023ன் புதிய கல்வியாண்டு ஆரம்பித்ததில் இருந்து கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலமாக வருவது அதிகரித்து உள்ளது என கல்வி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4ம் திகதி 2023-2024 ஆண்டுகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 46 கல்லூரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப் பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கூடுதலாக Normandie, Bordeaux, நகரங்களில் உள்ள 34 கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும்,Versaillesயில் 5 கல்லூரிகள் Créteilயில் 4 கல்லூரிகள் மற்றும் Lilleல் 3 கல்லூரிகள் என வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலியான மிரட்டல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் 140 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 100 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர். தொடர்ந்து போலியான மிரட்டல்களை விடுத்து விட்டு, ஒரு பெரும் தாக்குதலை நடத்தும் திட்டங்கள் பின்னணியில் இருக்கலாம் எனும் கோணத்திலும் விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.