எமானுவல் மக்ரோன் நடவடிக்கை கொதிக்கும் பிரித்தானியர்கள்

22 புரட்டாசி 2023 வெள்ளி 20:57 | பார்வைகள் : 15188
மூன்று நாள் விஜயமாக பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா ஆகியொர் பிரான்சிற்கு வந்திருந்தனர்.
இதில் ஒரு அங்கமாக வெற்றி வளைவும் வீழ்ந்துபட்ட மாவீரர்களின் நினைவிடமுமான Arc de triomphe. இற்கு மன்னர் சார்ள்ஸ், அவர் மனைவி கமிலா, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மற்றும் அவர் மனைவி பிரிஜித் மக்ரோன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அவ்வேளையில் பிரெஞ்சு முறையில் பிரிஜித் மக்ரோன் கமிலியாவின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அதே நேரம் எமானுவல் மக்ரோன் சார்ள்சின் வலது கரத்தினை அழுத்தி நட்பைத் தெரிவித்துள்ளார்.
இவை இரண்டும் மாபெரும் குற்றமென பிரித்தானியர்கள் விமர்சனம் செய்துள்ளனர். X வலை ஊடகத்தில் (முன்னாள் டுவிட்டர்) பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனை மோசமான காரியமாக பிரித்தானிய ஊடகங்கள் ஊதிப்பெருக்க வைத்துள்ளன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025