இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள இணைய மோசடி
23 புரட்டாசி 2023 சனி 03:45 | பார்வைகள் : 4212
இலங்கையில் இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறான 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார்.
தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.