Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரின் அத்துமீறல்கள், இனவெறிக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம்.

காவல்துறையினரின் அத்துமீறல்கள், இனவெறிக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம்.

23 புரட்டாசி 2023 சனி 06:46 | பார்வைகள் : 7031


இன்று சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் 30 முக்கிய நகரங்களில், La France insoumise கட்சியினர் மற்றும் Europe Ecologie-Les Verts கட்சியினர் CGTஉட்பட பல தொழில் சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
.
பிரான்ஸ் காவல்துறையினரின் அத்துமீறல்கள், தாக்குதல்கள், இனவெறி நடவடிக்கைகளை கண்டித்தே இப்பெரும் போராட்டம் இன்று நடத்தப்படவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் 21 000 முதல், 31 000 வரையான போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.  

இன்றைய போராட்டங்களில் காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல்கள், கலகங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது என உளவுத்துறை உள்நாட்டு அமைச்சுக்கு விடுத்த எச்சரிக்கையை அடுத்து, நாட்டில் உள்ள சகல காவல்துறை அலகுகளில் உள்ள அனைவரையும் இன்று தயார்நிலையில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் Gérald Darmanin பணிப்புரை விடுத்துள்ளனர்.

இன்று நாடுமுழுவதும் சுமார் 30 000 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்