அகண்டா பட இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் சூர்யா!?
20 புரட்டாசி 2023 புதன் 10:53 | பார்வைகள் : 3450
தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு சூர்யாவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் மிகவும் புகழ் பெற்றவர் போயப்பட்டி ஸ்ரீனு. தெலுங்கு ஹீரோக்களை அவர்கள் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு பயங்கரமா மாஸாக, ஹீரோ தொட்டாலே அடியாட்கள் 50 கிலோமீட்டர் தூரம் பறக்கும் வகையான மிரள வைக்கும் சண்டை காட்சிகளை படத்தில இடம் பெறச் செய்வார்.
நம்முடைய பவர் ஸ்டார் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படத்தை இயக்கியது இவர்தான் அப்படி என்றால் தெரிந்து கொள்ளலாம் இவருடைய மாஸ் என்னவென்று. தற்போது இவர் ராம் பொத்தினேனி நடிப்பில் நடிப்பில் ஸ்கந்தா என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திலும் மிகவும் மிரட்டலாக காணப்படுகிறார் ராம்.
தற்போது அந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து அவர் அல்லு அர்ஜுன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சரைனோடு என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
ஆனால் அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் போயப்பட்டி ஸ்ரீனு நடிகர் சூர்யாவுடன் முழுக்க முழுக்க மாஸ் மசாலா படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா போயப்பட்டி ஸ்ரீனு சொன்ன திரைக்கதைக்கு ஒப்புக்கொண்டு விட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என பல நம்பிக்கைக்குரிய இயக்குனர்களை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது