Paristamil Navigation Paristamil advert login

ஆசிரியர் படுகொலை - மனைவி கைது

ஆசிரியர் படுகொலை - மனைவி கைது

20 புரட்டாசி 2023 புதன் 13:31 | பார்வைகள் : 6200


Dunkerque நகரில் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தது. Dunkerque நகரில் ஆசிரியராக கடமையாற்றும் ஒருவரது சடலம் கடந்தவார இறுதியில் அவரது வீட்டில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது. பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டிருந்தார் எனவும், சம்பவ இடத்தில் இருந்து கத்தி மற்றும் கையுறைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்,   இக்கொலைச் சம்பவத்தில் முதலாவது குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அவரது மனைவி தேடப்பட்டு வந்திருந்தார். 

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை அவரது 37 வயதுடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவரைக் கொலை செய்துவிட்டு அவர் தனது ஒன்றரை வயது பிள்ளையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்