Paristamil Navigation Paristamil advert login

நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆண்ட்ரியா சாமி தரிசனம்

 நல்லூர் கந்தசாமி கோயிலில் ஆண்ட்ரியா சாமி தரிசனம்

20 புரட்டாசி 2023 புதன் 15:37 | பார்வைகள் : 11681


தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 மற்றும், கா, மாளிகை, நோ என்ட்ரி உள்பட பல படங்களில் நடித்தது வருகிறார். 

சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா, வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தான் இலங்கை சென்ற போது அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தெரிவித்திருக்கும் ஆண்ட்ரியா, அது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்