குழந்தைகளின் முடி வேகமாக வளர ....!
20 புரட்டாசி 2023 புதன் 15:44 | பார்வைகள் : 4448
பெரியவர்களைப் போல எல்லா சிறு குழந்தைகளுக்கும் ஒரே முடி இருப்பதில்லை. சிலருக்கு மெல்லி, அடர்த்தியான அல்லது சுருங்குடி கூட இருக்கலாம். இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் சில சமயங்களில் சிறு குழந்தைகளின் மெல்லிய முடி அவர்களின் பெற்றோருக்கு கவலை ஏற்படுகிறது. உங்கள் குழந்தையின் மெல்லிய கூந்தல் உங்களுக்கு பதத்துக்கு ஏற்படுத்துகிறது என்றால் இந்த எளிய குறிப்புகள் உங்கள் பிரச்சினையை தீர்க்க உதவும். ஆனால் இந்த வைத்தியம் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயோட்டிணை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: ரத்தத்தில் பயோட்டின், அதாவது வைட்டமின் பி7 அல்லது வைட்டமின் எச் குறைபாடு காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தையின் உணவில் பயோடின் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் அவை முடி வளர்ச்சிக்கு உதலாம். உதாரணமாக சாக்லேட், முட்டையின் மஞ்சள் கரு, பருப்பு வகைகள், பால், உலர் பழங்கள் ஆகியவற்ற உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் இதை செய்யும் போது குழந்தைக்கு பயோட்டின் உள்ள உணவுப் பொருட்களால் ஒவ்வாமை இருந்தால் அதை உட்கொள்ளும் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
மென்மையான துண்டு: குழந்தையை தலைக்கு குளிப்பாட்டிய பின் தலையை உலர்த்த ஒரு மென்மையான துண்டை பயன்படுத்த வேண்டும். துண்டு மென்மையாக இல்லாவிட்டால் அது குழந்தையின் மயிர் கால்களை சேதப்படுத்தும். இதன் காரணமாக அதிகப்படியான முட்டி உடைவதுடன் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யவும்: சிறு குழந்தைகளின் முடி வளர்ச்சி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆய்வு ஒன்றின் படி, தேங்காய் எண்ணெய் லகுவாக இருப்பதால் முடியில் எளிதில் உறிஞ்சப்பட்டு முடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது தவிர தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரத இழப்பு மற்றும் முடி சேதம் ஆகிய இரண்டையும் குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு பாதாம் கொடுக்கலாம்: சிறு குழந்தைகளின் முடி வளர்ச்சி அதிகரிக்க பாதாம் பருப்பை கொடுக்கலாம். பாதாமில் உள்ள புரதங்கள் வைட்டமின்கள் மற்றும் டோகோபெரோல்கள் முடி வளர்ச்சி ஊக்குவிக்கும். அதற்கு நீங்கள் ஊறவைத்த பாதாமை அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.