Paristamil Navigation Paristamil advert login

பாரிசில் மாபெரும் ஈழத் தமிழர் திரைவிழா, உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து குவியும் படைப்புகள்.

பாரிசில் மாபெரும் ஈழத் தமிழர் திரைவிழா, உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து குவியும் படைப்புகள்.

20 புரட்டாசி 2023 புதன் 16:51 | பார்வைகள் : 8649


எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி பாரிசை அண்டியுள்ள நகரமான Seine-Saint-Denis நகரில் உள்ள 9-11 Rue Genin 93200 Saint-Denis என்னும் முகவரியில் அமைந்திருக்கும் Bourse de Travail மண்டபத்தில்,  பிரான்சில் முதல்த் தடவையாக ஈழத் தமிழர் திரைவிழா நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் எங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களின் திரைத்துறை கலைஞர்களை மாண்பேற்றும் நோக்கில் குறித்த திரைவிழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லெப். கேணல் தவம் அவர்களின் நினைவு சுமந்த குறித்த திரைவிழாவிற்கு, thavamfilmfestival@gmail.com மற்றும்  Tccffrance2015@gmail.com என்னும் மின்னஞ்சல்கள் மூலமாக, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்பி வருவதாக திரைவிழாவை ஏற்பாடு செய்து நடாத்தும் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பிரான்சு தெரிவித்துள்ளது.

மேலும் விருதுக்காக தமக்கு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்பிவைக்கும் முடிவு திகதியை 20 செப்டம்பர் 2023ல் இருந்து பலரின் வேண்டுகோளுக்கு இணங்க 23 செப்டம்பர் 2023 வரையான மூன்று நாட்களை தாம் அதிகப்படியாக வழங்கியுள்ளதாகவும் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பிரான்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த திரைவிழா பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பிரான்சு கிளையின் செயல்பாட்டாளர்; "வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெறவுள்ள லெப் கேணல் தவம் திரைவிழாவிற்கு மக்கள் திரளாக வந்து ஆதரவு தரவேண்டும் என்றும், எங்களின் படைப்பாளிகளுக்கு எங்களின் பூர்ண ஆதரவு இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தி அவர்களை உற்சாகப்டுத்த வேண்டும் என்றும் தாங்கள் வேண்டுகோள் விடுப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்