Paristamil Navigation Paristamil advert login

பயணி ஒருவரை தாக்கிய RATP பாதுகாவலர் - விசாரணைகள் ஆரம்பம்

பயணி ஒருவரை தாக்கிய RATP பாதுகாவலர் - விசாரணைகள் ஆரம்பம்

20 புரட்டாசி 2023 புதன் 17:42 | பார்வைகள் : 13192


RATP தொடருந்து நிறுனத்தில் பணிபுரியும் பாதுகாவலர் பயணி ஒருவரை தாக்கிய காட்சிகள் காணொளியாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செவ்வாய்க்கிழமை மாலை இத்தாக்குதல் சம்பவம் Gare de l'Est தொடருந்து நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. பயணி ஒருவரை பாதுகாவலர் ஒருவர் தரையில் வீழ்த்தி காலால் எட்டி உதைக்கும் காட்சிகளே காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறதை அடுத்து, மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தாக்குதலுக்குரிய காரணங்கள் எதுவும் அறிய முடியவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்