Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி பிரயோகம் - இருவர் பலி

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி பிரயோகம் - இருவர் பலி

21 புரட்டாசி 2023 வியாழன் 03:12 | பார்வைகள் : 10673


அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்