பிரான்ஸ்-நபீபியா மோதும் ரக்பி போட்டி - பாதுகாப்பு பலப்படுத்தல்

21 புரட்டாசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 10074
ரக்பி உலகக்கிண்ணத்தில் இன்று வியாழக்கிழமை பிரான்ஸ்-நபீபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் போது ரசிகர்கள் மோதல் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Place de la Concorde இல் இந்த போட்டி இடம்பெற உள்ளது. மைதானதுக்கு வெளியே இராட்சத திரையில் போட்டி ஒளிபரப்பட உள்ளது. போட்டிகளைக் காண ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Concorde மற்றும் Tuileries மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
ரக்பி மைதானம் பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும். Place de la Concorde பகுதியில் நண்பகல் முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். மாலை 4 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு, பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நேற்று புதன்கிழமை மாலை காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.