சீனாவை கடுமையாக தாக்கிய சூறாவளி - 10 பேர் பலி!
21 புரட்டாசி 2023 வியாழன் 07:12 | பார்வைகள் : 5819
சீனாவின் கிழக்கு ஜியான்க்சு மாகாணத்தின் சுகியான் நகரில் மையம் கொண்டு சூறாவளி புயல் உருவானது.
மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளியால் சுஜியன் மற்றும் யான்செங் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
குறித்த பகுதியில் 5 பேர் பலியாகினர்.
நான்கு பேர் படுகாயமடைந்தனர். 1, 646 வீடுகள் சேதமடைந்தன. பல ஏக்கர் பயிர்கள் நாசமாகின.
அதேபோல் யான்செங் நகரில் வீசிய சூறாவளியால் மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.
சீன வானிலை அதிகாரிகள் பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று பற்றிய எச்சரிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.