தேங்காய் லட்டு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9705
என்ன இனிப்பு செய்வது என்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் தேங்காய் லட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்தும் வகையில் அதன சுவையானது இருக்கும். மேலும் இந்த ரெசிபிக்கு தேங்காய், பால், சர்க்கரை இருந்தால் போதும். அரை மணிநேரத்தில் தயார் செய்துவிடலாம். இங்கு அந்த தேங்காய் லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
பாதாம் - 4-5
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குறிப்பாக அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கிளறி 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட்டு, பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது, கையில் வெண்ணெய் தடவி, அதனை லட்டுகளாக பிடித்து, ஒவ்வொன்றின் மீது பாதாமை வைத்தால், சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!