Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை 

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய தடை 

21 புரட்டாசி 2023 வியாழன் 07:32 | பார்வைகள் : 10557


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது தற்பொழுது  அமுலில் உள்ளது. 

இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். 

மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்