Paristamil Navigation Paristamil advert login

சாள்ஸ் மன்னரின் பிரான்ஸ் வருகை - பிரித்தானிய ஊடகங்கள் முவைத்த விமர்சனம்!

சாள்ஸ் மன்னரின் பிரான்ஸ் வருகை -  பிரித்தானிய ஊடகங்கள் முவைத்த விமர்சனம்!

21 புரட்டாசி 2023 வியாழன் 09:37 | பார்வைகள் : 4319


சாள்ஸ் மன்னர் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று புதன்கிழமை பரிசுக்கு வருகை தந்துள்ளமை அறிந்ததே. இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீதும், பிரெஞ்சு அரசின் மீதும் பிரித்தானிய ஊடகங்கள் சில விமர்சனங்கள் முன்வைத்துள்ளன. 

மூன்றாம் சாள்ஸ் மன்னரும் அவரது மனைவி அரசியார் கமீலாவும் ஓர்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய போது, அவர்களை பிரதமர் Elisabeth Borne வரவேற்றார். சிவப்பு கம்பளத்தில் மன்னர் மற்றும் அரசியரின் கைகளை குலுக்கி அவர்களை பிரதமர் வரவேற்றார்.

அங்கிருந்து Arc de Triomphe பகுதிக்கு மன்னர் மற்றும் அரசியார் சென்றபோது அங்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.
அதன்போதும் இருவரும் மன்னர் மற்றும் அரசியாரின் கைகளை குலுக்கியிருந்தனர். 

பின்னர் சோம்ப்ஸ்-எலிசேயில் வைத்தும், எலிசே மாளிகையில் வைத்தும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அரசரின் தோளில் கைகளை வைத்திருந்தார். 

இங்கிலாந்து அரசரையோ, அரசியாரையோ ஏனையவர்கள் தொடுவது தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும். இதனை மேற்கோள் காட்டி பிரான்ஸ்மீது கடும் விமர்சங்கள் இங்கிலாந்து ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

“crime of lèse-majesté” (அரசர் அல்லது அரசிக்கு எதிரான குற்றம்) என தலைப்பிடப்பட்டு பல செய்திகளை இங்கிலாந்தின் பல ஆங்கில பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. 

Arc de Triomphe இல் வைத்து அரசியார் கமீலாவை முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் சந்தித்தபோது அவரது கன்னத்தினை முத்தமிட்டிருந்தார். இச்செயலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்