விஜய்யின் 'லியோ' அட்டகாசமான தமிழ் போஸ்டர்..

21 புரட்டாசி 2023 வியாழன் 12:59 | பார்வைகள் : 5829
‘லியோ’ படத்தின் விதவிதமான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அட்டகாசமான கலர்ஃபுல்லான இந்த போஸ்டரை பார்த்து விருது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து உள்ளனர் மேலும் ‘லியோ’ அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் வரை கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.