Paristamil Navigation Paristamil advert login

நெல்சன் அடுத்த படத்தின் நாயகி நாயகன் யார் தெரியுமா?

நெல்சன் அடுத்த படத்தின் நாயகி  நாயகன் யார் தெரியுமா?

21 புரட்டாசி 2023 வியாழன் 11:48 | பார்வைகள் : 3060


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தை நெல்சன் இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நெல்சன் இயக்கும் அடுத்த திரைப்படம் என்ன? அவரது அடுத்த படத்தின் ஹீரோ ஹீரோயின் யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்து உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே தான் நாயகி என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நெல்சன் உடன் அவர் மீண்டும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட பான் இந்திய திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்