Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பேருந்து சாரதி

இலங்கையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பேருந்து சாரதி

25 புரட்டாசி 2023 திங்கள் 03:21 | பார்வைகள் : 6597


கம்பளை பகுதியில்  பஸ்வொன்றில்  பயணித்த நபரொருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை வான் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் மறித்து 46 வயதுடைய குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி என்றும் வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்