Paristamil Navigation Paristamil advert login

யூடியூப் நிறுவனத்தை அசர வைத்த இலங்கையர்கள்

யூடியூப் நிறுவனத்தை அசர வைத்த இலங்கையர்கள்

25 புரட்டாசி 2023 திங்கள் 05:49 | பார்வைகள் : 3983


யூடியூப் சமூக ஊடக வலையமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட AI செயற்கை நுண்ணறிவால் இயங்கும் குரல் ஓவர் கருவி (தங்களுக்கு விருப்பமான மொழியில் வீடியோவைப் பார்க்க உதவும்) ஒன்றை இலங்கையைச் சேர்ந்த புத்திக கோட்டஹச்சி மற்றும் சசக்தி அபேசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் இணை உருவாக்குநர்களாக இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த கருவிக்கு YouTube நிறுவனம் , Aloud என பெயரிட்டுள்ளது. இந்த இரண்டு இலங்கையர்களும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் 80 வீதமானவர்களுக்கு ஆங்கில மொழியைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாகவும், இதனால் 80 வீதமான மக்கள் யூடியூப் சமூக ஊடக வலையமைப்பில் உள்ள உள்ளடக்கத்தினால் பயனடையவில்லை எனவும் யூடியூப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த பிரச்சனைக்கு தீர்வாக யூடியூப் நிறுவனம் Aloud செயற்கை நுண்ணறிவு கருவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கருவி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் வீடியோவைப் பார்க்க உதவும் என்று யூடியூப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்