Montparnasse நிலையத்தில் இன்று காலையும் நீடித்த போக்குவரத்து தடை
 
                    25 புரட்டாசி 2023 திங்கள் 06:52 | பார்வைகள் : 12361
நேற்று மாலை Montparnasse நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து தடை, இன்று திங்கட்கிழமை காலையும் நீடித்தது.
பல்வேறு TGV தொடருந்துகள் தாமதமாக நிலையத்தை வந்தடைந்தன. பயணிகள் நீண்டநேரமாக காத்திருந்தனர். 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை இந்த தாமதம் நீடித்தது. Massy-Palaiseau, (Essonne) நகரில் உள்ள மின்வழங்கியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இந்த தடை ஏற்பட்டதாக SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ouigo தொடருந்தில் பயணித்த பயணிகள் சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்று மற்றொரு தொடருந்தில் ஏறி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கான பயணக்கட்டணம் 200% சதவீதம் திருப்பி அளிக்கப்படும் என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
        .jpg) 
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan