இந்திய அணி வரலாற்று சாதனை.....
25 புரட்டாசி 2023 திங்கள் 08:48 | பார்வைகள் : 3424
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தனர்.
கில் (104), ஷ்ரேயாஸ் (105) இருவருமே அதிரடி சதம் விளாசி ஆட்டமிழந்தனர்.
இவர்களது கூட்டணி 200 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த ராகுல் அதிரடியாக 52 (38) ஓட்டங்களும், இஷான் கிஷன் 31 (18) ஓட்டங்களும் எடுத்தனர்.
சரவெடியாய் வெடித்த சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 399 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா தரப்பில் கிரீன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா 56/2 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால், 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு 317 ஓட்டங்களாக வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அஸ்வின்-ஜடேஜா மிரட்டல் பந்துவீச்சு தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணியில் வார்னர் 53 ஓட்டங்களில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களை அஸ்வின்-ஜடேஜா பந்துவீச்சு கூட்டணி ஆட்டமிழக்க செய்தது. இறுதிவரை போராடிய சியான் அபோட் அதிரடியாக 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசி கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார்.
இதனால் அவுஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3000 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பாரிய சாதனையை இந்தியா படைத்தது.