Paristamil Navigation Paristamil advert login

ஒரே நேரத்தில் பத்து கடத்தல்காரர்கள் Valence நகரில் கைது.

ஒரே நேரத்தில் பத்து கடத்தல்காரர்கள் Valence நகரில் கைது.

25 புரட்டாசி 2023 திங்கள் 08:57 | பார்வைகள் : 15241


கடந்த இரண்டு ஆண்டுகளில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நான்கு படுகொலைகள், தீவிர போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற வற்றில் ஈடுபட்டுவந்த ஒரு கும்பலையே, இன்று அதிகாலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் Gérald Darmanin அவர்களின் நேரடி கண்காணிப்பில் காவல்துறையினரின் விசேட பிரிவுகளான Raid, BRI பிரிவினரோடு  CRS காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகிறது.

கைது நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், ரைபில்கள், ரவ்வைஙள், என மிக மோசமான ஆயுதங்களும், போதைப்பொருட்களும் பல்லாயிரக் கணக்கான பணமும் கைப்பற்றப்பட்டது எனவும் தெரியவருகிறது.

நீண்ட கால திட்டமிடலின் பின்னர்  Valence, நகரில் Drôme பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கையை ஒரேநேரத்தில் தாம் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்