4 அடி நீளத்தில் மிகப்பெரிய எலி
25 புரட்டாசி 2023 திங்கள் 09:43 | பார்வைகள் : 2255
உலகின் பல நகரங்களில் எலிகளின் அட்டகாசம் காணப்படும் நிலையில் வல்லரசு நாடுகளாலும் கூட இந்த எலித் தொல்லையை கட்டுப்படுத்த முடியாது திண்டாடுகின்றன.
எலிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க்கில், மக்கள் 4 அடி நீளமுள்ள எலிகளைப் பார்த்தனர். இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய எலி இதுதான் என கூறப்படுகின்றது.
அந்த எலி 4 அடி நீளத்தில் தற்போது எலிகளின் உருவம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக ஓர் அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.
பெரிய நகரங்களில் எலிகள் உணவு தேடி அங்கும் இங்கும் அலைவதை சாலைகளில், அடிக்கடி காணலாம்.
சமீப காலமாக இந்த எலிகளின் அளவு அதிகரித்துள்ள விதம் கவலைக்குரிய விஷயமாகி வருகிறது. எலிகளின் அளவு மனிதக் குழந்தைக்கு சமமாகி வருவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதோடு இந்த இடங்களில் எலிகள் நன்றாக வளரும். காரணம், அவைகளுக்கு எளிதில் கிடைக்கும் உணவு. இருப்பினும், இப்போது அவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதுடன் அவை பெரிதாகி வருகின்றதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
எலிகளின் அளவு அதிகரித்து வருவதால், வீடுகளுக்குள் நுழைந்து, தங்களுக்கான உணவைத் தேடும் தைரியமும் அவற்றிற்கு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.